கொழும்பு, காலி முகத்திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக இலங்கை இளைஞர்களால் நடத்தப்பட்டு வரும் போராட்டம் குறித்து வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
10வது நாளாக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தை வெளிநாட்டு வாழ் சுற்றுலா பயணி ஒருவர் புகழ்ந்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது எப்படி என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டாகும் வகையில் இந்த போராட்டம் உள்ளது. இலங்கை மக்களிடையே உள்ள ஒற்றுமையை நான் இதுவரை எங்கும் பார்த்திராத ஒன்றாகும்.
இந்த மக்கள் மிகவும் வரவேற்கப்படுகிறார்கள் மற்றும் உறுதியானவர்கள். மிகவும் அமைதியாக போராடுகின்றார்கள். இளைஞர்களின் போராட்டத்தில் ஒரு நேர்மையை பார்க்க முடிகின்றது.
ஒரு போராட்டத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதனை உலகம் புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான சிறந்த உதாரணம் இதுவாகும். மிகவும் அறிவார்ந்த சிந்திக்கும் திறன் கொண்ட மக்கள் இலங்கையில் வாழ்கின்றார்கள். உலக மக்கள் இலங்கையர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஒரு முஸ்லிம் பெண் ஒரு பௌத்த தேருக்கு மழையின் போது குடைபிடித்ததனை நான் அவதானித்தேன். முஸ்லிம் மக்கள் பிரார்தனைக்கு செல்லும் போது பௌத்த மக்கள் குடைபிடித்து பாதுகாத்ததனையும் பார்த்தேன்.
இந்த மக்களிடையே உள்ள ஒற்றுமை உணர்வு நான் என் வாழ்நாளில் ஒரு முறையேனும் உலகில் எந்த நாட்டிலும் பார்க்காத ஒன்றாகும். இது மிகவும் விசேட விடயங்களில் ஒன்றாக நான் பார்க்கின்றேன்” என குறித்த வெளிநாட்டு பெண் மேலும் தெரிவித்துள்ளார்.