இலங்கையின் வரலாற்றில் 17 தடவைகள் அரசாங்கங்களுக்கு எதிராக யோசனைகள் முன்வைக்கப்பட்டு அவை தோல்வியில் முடிந்துள்ளன.
எனவே நடப்பு அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா யோசனையை சமர்ப்பிக்கும் முன்னர் அந்த யோசனைக்கு 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறதா? என்பதை உறுதிச் செய்துக்கொள்ளவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர் இந்த யோசனையை முன்வைக்கவுள்ளனர்.
இந்தநிலையில் இந்த யோசனையில் இதுவரை ஐக்கிய மக்கள் சக்தியினரும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய முன்னணியும் மாத்திரம் கையெழுத்திட்டுள்ளன.
எனினும் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தைகளை சஜித் தரப்பு இன்னும் ஆரம்பிக்கவில்லை என்றும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அரச நிர்வாகத்தை முன்னெடுத்து செல்ல இடைக்கால அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த விடயத்தில் சஜித் தரப்பினர் உடன்பாட்டை காணவேண்டும் என்றும் கம்மன்பில தெரிவித்துள்ளார்