இன்றைய இளசுகள் மத்தியில் வட்ஸ் அப் முக்கிய இடத்தை பிடித்துள்ளது அனைவரும் அறிந்ததே. நித்திரைக்கு போகும்போதும் சரி நித்திரைவிட்டு எழும்பும் போதும் சரி வட்ஸ் அப் பார்க்காது விடுவதில்லை இன்றைய இளைஞர்கள்.
அந்த அளவிற்கு வட்ஸ் அப் அவர்களின் வாழ்க்கையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில் இனி இன்டர்நெட் இல்லாமலேயா வட்ஸ் அப் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகின்றது.
இது அனைத்து இளைஞர்களுக்கும் சந்தோசமான செய்தியாகவே இருக்கும் எனினும் அது அனைத்து கைப்பேசிகளிலும் இல்லை.
ஐபோன்களில் ஐ. ஓ. எஸ். அப்டேட் வட்ஸ்ஆப் (பதிப்பு 2. 17. 1. ) எனும் புதிய பதிப்புக்கு உங்களது மென்பொருளை அப்டேட் செய்ய வேண்டும்.
ஐ. போன, ஐ பாட், ஐ பாட் ரஜ் ஆகியவற்றில் இதை அப்டேட் செய்ய முடியும். இந்த அப்டேட் மூலம் இன்டர்நெட் இல்லாமலும் வட்ஸ் அப்பில் தகவல்களை பரிமாரிக்கொள்ளலாம் என்று கூறப்படுகின்றது.