மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘காற்று வெளியிடை’ படத்தின் ‘அழகியே’ சிங்கிள் பாடல் கடந்த 2ஆம் தேதி வெளிவந்து ஏ.ஆர்.ரஹ்மானின் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் ரிலீஸ் திகதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ‘வான்’ என்று தொடங்கும் இந்த படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் பிப்ரவரி 14-ம் திகதி ‘காதலர் தினத்தில் வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த போஸ்டருடன் கூடிய தகவல் தற்போது இணையதளத்தில் வெளிவந்துள்ளது. காதலர் தினத்தில் வெளிவருவதால் இந்த பாடல் பக்கா ரொமான்ஸ் பாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்தி, அதிதிராவ் ஹைதி, ஆர்ஜே பாலாஜி, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
இந்த படத்தை தமிழகம் முழுவதும் வரும் கோடை விடுமுறையில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.