இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை மாநிலங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ”தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இதுவரை அடைந்த வெற்றிகளை இழக்காமல் தடுப்பு நடவடிக்கையை பின்பற்றுமாறு அனைத்து மாநிலங்கள், மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
தொற்றுநோய் பரவுவதைக் தொடந்து கண்காணிக்கவும், கொரோனா தடுப்பை விரைவாகவும், திறமையாகவும், நிர்வகிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
தடுப்பூசி கட்டுப்பாடுகளை கடைபிடிப்பது நெரிசலான பகுதிகளில் முககவசம் அணிவது உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்” எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.