Loading...
மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மக்கள் பட்டினியின்றி வாழ்வதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
எரிவாயு எரிபொருள் மற்றும் நுகர்வுப் பொருட்களுக்கு நியாயமான விலையை நிர்ணயித்து தட்டுப்பாடு இன்றி மக்களுக்கு வழங்குவதன் மூலம் போராட்டங்கள் பரவுவதைத் தடுக்க முடியும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.
Loading...