தங்கம் விலை நேற்று குறைந்திருந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக தங்கம் வாங்குவதிலும் தற்போது பல குழப்பங்கள் உள்ளன. இந்த நெருக்கடியால் உலகளாவிய தங்க சந்தையில் மிகப்பெரிய ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது.
உலகளாவிய ஸ்திரமற்ற தன்மை, சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சில நேரம் ஏற்றத்தையும் சில நேரம் வீழ்ச்சியையும் கண்டு வருகின்றது. இந்த நிலையில், நேற்று விலை குறைந்து மக்களை மகிழ்வித்த தங்கம் இன்று விலை உயர்ந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்து ரூ. 4,969 ஆக உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 48 உயர்ந்து 39,752 ரூபாய்க்கு விற்பனையில் உள்ளது.
24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 5,368 ஆகவும் ஒரு சவரன் ரூ. 42,944 ஆகவும் விற்பனையில் உள்ளது.
வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று காலை நிலவரப்படி, ஒரு கிராம் வெள்ளி 73.30 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 73,300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ரஷ்யா உக்ரைன் போரால், பல வித அத்தியாவசிய பொருட்களோடு கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலையும் அதிகமாக உயர்ந்தது. இதன் தாக்கம் அனைத்து நாடுகளைப் போல இந்தியாவிலும் காணப்படுகின்றது.