Loading...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம் எவ்வளவு சொத்துக்கள் உள்ளன என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
கடந்த 3ஆம் திகதி முதல் நாட்டில் அமுலுக்கு வந்த தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் அடிப்படையில் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
Loading...
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் சொத்து விபரங்களை வெளியிடுமாறு கோரி தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் அடிப்படையில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
ட்ரான்ஸ்பெரன்ஸி ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் இந்த விண்ணப்பம் தாக்கப்பட்டுள்ளது. இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு என்பன தொடர்பிலும் தகவல்களை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
Loading...