Loading...
பொதுவாக சிலருக்கு தொடையில் கருமையாக இருக்கும். அதிலும் குறிப்பாக குண்டாக இருப்பவர்களின் தொடைகளில் தான் அதிக கருமை நிறமாக இருக்கும்.
ஏனெனில் உடல் பருமன் கொண்டவர்கள், அதிக உராய்வுத் தன்மை, இறுக்கமான உடைகளை அணிவதல், ஹார்மோன் மாற்றங்கள் போன்ற காரணங்களினால் தொடையில் உள்ள சருமம் கருமையாக மாற்றம் அடைகிறது.
Loading...
ஒருசில இயற்கையான முறைகள் மூலம் தொடைப் பகுதியில், இருக்கும் கருமை நிறத்தினை விரைவில் போக்கி விடலாம்.
தொடைப் பகுதியில் உள்ள கருமையை போக்குவது எப்படி?
- எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி, தொடையில் 15 நிமிடம் தேய்த்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவி, துணியால் துடைத்து விட்டு, ஆலிவ் ஆயில் தடவ வேண்டும்.
- எலுமிச்சை சாற்றினை தொடையில் தடவி, சர்க்கரை கொண்டு மென்மையாக 15 நிமிடம் ஸ்கரப் செய்து, பின் கழுவ வேண்டும். இதனால் தொடையில் இருக்கும் இறந்த செல்கள் மற்றும் கருமை நீங்கி, விரைவில் நல்ல மாற்றம் கிடைக்கும்.
- 1 டீஸ்பூன் பால் பவுடர், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, அதனுடன் சில துளிகள் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, தொடையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்துக் கழுவ வேண்டும்.
- ஓட்ஸ் பொடி, தயிர் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, தொடையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
- சந்தனப் பவுடரில் வெள்ளரிக்காய் சாறு சேர்த்துக் கலந்து பேஸ்ட் செய்து, அதை தினமும் தொடையில் தடவி உலர வைத்து கழுவி வந்தால், தொடையின் கருமை நீங்கி வெள்ளையாகும்.
- கடலை மாவு, தயிர் மற்றும் 1 சிட்டிகை மஞ்சளை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, தொடையில் தடவி உலர வைத்து கழுவி வந்தால், தொடையில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி, தொடையின் கருமை விரைவில் நீங்கிவிடும்.
Loading...