Loading...
பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடைந்தபோது எழுந்த ஆலாலம் எனும் கொடிய விஷத்தை விழுங்கி தன் கழுத்தில் ஆபரணமாக நிறுத்திய ஈசன் விஷாபரணமூர்த்தியாக வணங்கப்படுகிறார்.
Loading...
- லிங்கோத்பவர் – முக்தி கிடைக்கும்
- திரிமூர்த்தி – குழந்தைப்பேறு அமையும்
- கல்யாண சுந்தரர் – திருமண பாக்கியம் வந்துசேரும்
- சுகாசனர் – நியாயமான ஆசைகள் நிறைவேறும்
- கங்காதரர் – பாவங்கள் விலகும்
- நடேசர் – மகப்பேறு கிட்டும்
- சண்டேச அனுக்ரகர் – கெட்ட எண்ணம் நீங்கும்
- ரிஷபாரூடர் – நல்ல முயற்சிகளில் வெற்றி வந்துசேரும்
- நீலகண்டர் – விஷ பூச்சிகளின் ஆபத்து நீங்கும்.
- ஹரிஹர மூர்த்தி – வழக்குகள் வெற்றியாகும்.
- ஏகபாத மூர்த்தி – தம்பதியினரிடையே ஒற்றுமை நிலவும்
- உமாசகாயர் – துணையின் உடல்நலம் சீராகும்
- அர்த்தநாரீஸ்வரர் – தம்பதியர் கருத்து வேறுபாடு மறையும்
- தட்சிணாமூர்த்தி – கலை ஞானம், கல்வி ஞானம் வளரும்
- சோமாதி நாயகர் – சகல சவுபாக்கியமும் கிடைக்கும்
- சோமாஸ்கந்தர் – பிள்ளைகள் ஆரோக்கியமாக இருப்பர்
- சந்திர மவுலீஸ்வரர் – தனமும் தானியமும் சேரும்
- வீரபத்திரர் – எதிரி பயம் விலகும்
- காலசம்ஹாரர் – மரண பயமும், அகால மரணமும் நேராது
- காமாந்தகர் – தடைகள் நீங்கும், ஞானம் சித்திக்கும்
- கஜசம்ஹாரர் – பிறர் செய்த தீவினையின் பாதிப்பு அகலும்
- திரிபுர சம்ஹாரர் – பிறவிப் பிணி தீரும், எம பயம் வராது
- பிட்சாடனர் – மோக மாயை விலகும்
- ஜலந்தர சம்ஹாரர் – விரோதிகள் விலகுவர்
- சரப மூர்த்தி – மாயை, கன்மம் விலகும்
- பைரவர் – இறையருள் எப்போதும் காக்கும்.
Loading...