Loading...
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில் புதிய அமைச்சரவை இன்று முதல் முறையாக கூடவுள்ளது.
அதன்படி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெறவுள்ளது.
கடுமையான அரசியல் ஸ்திரமின்மைக்கு மத்தியில் முழு அமைச்சரவையும் இராஜினாமா செய்திருந்த நிலையில், கடந்த 18ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.
Loading...
இந்நிலையிலேயே புதிய அமைச்சர்களுடனான அமைச்சரவை முதல் முறையாக இன்று கூடவுள்ளது.
இதேநேரம், அரசியலமைப்பின் 20ஆம் திருத்தச் சட்டத்தை நீக்கி, 19ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அமைச்சரவை பத்திரம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.
Loading...