ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் வழக்குகளை எதிர்நோக்கியுள்ள முன்னாள் அமைச்சர்கள் உட்பட அரசியல்வாதிகள் நாட்டில் இருந்து தப்பிச் செல்ல தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் இதனால், அவர்களின் கடவுச்சீட்டுக்களை தடை செய்யும் உத்தரவை பெற நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணிகள் சிலர், சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டமா அதிபரை சந்தித்து இந்த கோரிக்கையை விடுத்ததாக சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
இவர்கள் தப்பிச் சென்றால், வழக்குகளை முன்னெடுத்துச் செல்வதில் தடையேற்படும் எனவும் அப்படி நடந்தால், அவர்கள் மோசடியான முறையில் பயன்படுத்திய அரச பொது நிதி மற்றும் சொத்துக்களை கைப்பற்றும் நடவடிக்கைக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் சுனில் வட்டகல சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் வழக்குகளை எதிர்நோக்கியுள்ள முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் வெளிநாடு செல்வதை தடுக்க உடனடியாக கடவுச்சீட்டை தடை செய்யும் உத்தரவை பெற்றுக்கொள்ளுமாறு சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சட்டத்தரணிகள் முன்வைத்த இந்த கோரிக்கைக்கு சட்டமா அதிபரி சாதகமான பதில் கிடைத்தது எனவும் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.