Loading...
2017ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் உறுதியளித்தவாறு வேதன உயர்வு வழங்கப்படவில்லையென தெரிவித்து, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடுதழுவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நடத்திவருகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் முதல் சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், அதற்கான சுற்றுநிரூபத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதுவரை வெளியிடவில்லையென கல்விசாரா ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Loading...
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Loading...