எல்லா பெண்களும் சந்தேகப்படுவதில்லை. சிலரது அதீத அன்பு சந்தேக தோற்றத்தில் வெளிப்படும். ஏனெனில், எல்லா மனைவிகளுக்கும் தன் கணவன் தான் ஆணழகன் என்ற பெருமிதம் இருக்கும்.
காக்கைக்கு தன்குஞ்சு பொன் குஞ்சு தானே. ஆயினும், ஒருசில விஷயங்களில் ஆண் கற்பூரம் அடித்து சத்தியம் செய்து உண்மையை கூறினாலும்…
இவன் “பொய் சொல்றானோ…” என்ற சந்தேகம் பெண்கள் மனதில் எழும்… அது என்னென்ன விஷயங்கள் என இங்கு காணலாம்…
ஐஞ்சு நிமிஷத்துல வரேன்… எங்கேனும் செல்லும் போது நேர தாமதம் ஆகும் போது ஆண்கள் இதோ அஞ்சு நிமிஷத்துல வந்துருவேன்…. இதை பெண்கள் ஒரு போதும் நம்புவதே இல்லை.
அந்த பொண்ணு கூட பேசுறதே இல்ல… பழைய தோழிகள், பழைய காதல்… அல்லது அவர்களுக்கு பிடிக்காத பெண்களுடன் பேசுவதே இல்லை என கற்பூரம் அடித்து சத்தியம் செய்தாலும் நம்ப மாட்டார்கள்.
கண்டிப்பா நெக்ஸ் டைம் கூட்டிட்டு போறேன்… ஒரு இடத்திற்கோ, படத்திற்கோ நெக்ஸ்ட் டைம் கூட்டிட்டு போறேன் என நாம் அளிக்கும் வாக்குறுதிகளை பெண்கள் நம்புவதே இல்லை.
நான் ரொம்ப நல்லவன்… எந்த ஒரு ஆணும், தன்னை தானே நல்லவன் என்று சொல்வதை பெண்கள் நம்புவது இல்லை.
யாரு…. பொண்ணா நான் பாக்கவே இல்ல… ரோடில் ஒரு பெண் கடந்து செல்வதை நிஜமாகவே பார்க்கவில்லை.. அப்படியா யாரு, எந்த பொண்ணு என்று ஆண்கள் கூறுவதை பெண்கள் மனம் ஏற்பதில்லை.
நான் சரக்க விட்டு ரொம்ப நாள் ஆச்சு… சரக்க தொட்டே பல நாள் ஆச்சு. அதெல்லாம் விட்டுட்டேன். அதான் உன்கிட்ட சத்தியம் பண்ணிருக்கேன்ல அப்பறம் எப்படி… இந்த வாக்கியத்தை பெண்கள் ஒருபோதும் நம்ப தயாராக இல்லையாம்.
முன்னாள் காதலி… எனக்கு ஒரு லவ் ஸ்டோரி இருந்துச்சு என ஒரு கதையை நீங்கள் சொல்ல ஆரம்பிக்கும் போதே, இவன் நிஜமாவே சொல்றானா இல்ல ரீல் விடறானா என பெண்கள் எண்ண துவங்கி விடுவார்களாம்.
யார் கூட சாட் பண்ற…. அவங்க கால் பண்ணும் போது நாம பசங்க கூட சாட் பண்ணிட்டு இருந்தாலோ, பேசிட்டு இருந்தாலோ அதை உண்மை என அவர்கள் நம்பவே மாட்டார்கள்.
ஜஸ்ட் பிரெண்ட்… ஒரு பெண்ணை பற்றி அதிகமாக பேசினாலோ, அந்த பெண்ணிடம் அதிகம் பழகினாலோ… அவர் ஜஸ்ட் ஒரு பிரெண்ட் தான் என கூறுவதை பெண்கள் நம்ப மாட்டார்கள்.
உண்மையாலே இதுதான் காரணம்… நீங்கள் தாமதாக வந்ததற்கோ, அல்லது நண்பர்களுடன் வெளியே சொன்றதற்கோ உண்மை காரணத்தையே கூறினாலும் கூட, இல்ல இவன் பொய் தான் சொல்றான் என்ற எண்ணம் தான் அதிகம் ஏற்படுமாம் பெண்களிடம்.