Loading...
நுரைச்சோலை வேலைத்திட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சீன அதிகாரிகள் 15 பில்லியன் ரூபா வழங்கியிருந்தனர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்திருந்தார்.
“இந்த தகவலை சீன தூதுவரே என்னிடம் கூறினார்” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, அத்தனகலை பகுதியில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் ஜீ.எல்.பீரீஸ் சீன தூதரகத்தை தொடர்புகொண்டுள்ளார்.
Loading...
இதற்கு பதிலளித்த சீன தூதரகம்,
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுடன் ஒன்றரை வருடமாக எந்த சந்திப்பும் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளது.
மேலும், இந்த விடயம் முற்றிலும் பொய் என சீன தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...