Loading...
நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் காரில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாலாவி – கற்பிட்டி பிரதான வீதியில் நேற்றிரவு(புதன்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
Loading...
விபத்து இடம்பெற்ற போது, நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமும் குறித்த காரில் பயணித்துள்ளமை பொலிஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், விபத்து தொடர்பில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
Loading...