கனடாவில், குழந்தைகளின் உடல்களைச் சேமிப்பகத்தில் மறைத்து வைத்த மாதின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
43 வயதாகும் ஆண்ட்ரியா ஜீஸ்பிரெக்ட், 2014-ஆம் ஆண்டு, தம்முடைய 6 குழந்தைகளின் உடல்களைச் சேமிப்பு லாக்கர் ஒன்றில் மறைத்துவைத்தார்.
ஜீஸ்பிரெக்ட், லாக்கருக்கான வாடகையைத் தரத் தவறியதால் லாக்கரில் உள்ள பொருட்களை ஏலம் விடுவதற்காகச் சேமிப்பக ஊழியர் அதனைத் திறந்தபோது அந்த 6 உடல்களையும் அழுகிய நிலையில் கண்டெடுத்தார்.
பிறந்து 34 முதல் 40 வாரங்களே ஆன அந்தக் குழந்தைகள் குப்பை பைகளிலும், பிளாஸ்டிக் தொட்டிகளிலும் வைக்கப்பட்டிருந்தன. விளையாட்டு பொம்மைகளும், குழந்தை உடைகளும் லாக்கரில் இருந்தன.
குழந்தைகள் உயிருடன் பிறந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகளின் உடல்கள் மோசமாக அழுகியிருந்ததால் மரணத்திற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
மரபணுச் சோதனை மூலம் ஜீஸ்பிரெக்ட்தான் அந்தக் குழந்தைகளின் தாயார் என்பது நிரூபனம் ஆகியுள்ளது.
அவருக்கான தண்டனை பின்னர் ஒரு நாளில் வழங்கப்படும்.