ஒவ்வொரு வாரமும் சென்னை பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் குறித்து நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த வார இறுதி நாட்களில் சென்னையின் பாக்ஸ் ஆபீஸ் குறித்து தற்போது பார்ப்போம்.
கடந்த வியாழன் அன்று வெளியான ஜெயம் ரவியின் ‘போகன்’ பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றதை அடுத்து சென்னையில் இந்த படம் கடந்த வார இறுதியில் 19 திரையரங்குகளில் 307 காட்சிகள் திரையிடப்படு ரூ.1,18,01,180 வசூல் செய்துள்ளது.
மேலும் இந்த படம் பிப்ரவரி 2 முதல் பிப்ரவரி 5 வரையிலான 4 நாட்களில் சென்னையில் ரூ.1,61,65,850 வசூல் செய்துள்ளது.
மேலும் திரையரங்குகளில் 90% பார்வையாளர்கள் நிரம்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயம் ரவியின் அதிகபட்ச சென்னை ஓப்பனிங் வசூல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பிப்ரவரி 2ல் வெளியான இன்னொரு படமான ‘எனக்கு வாய்த்த அடிமைகள் திரைப்படம் சென்னையில் கடந்த வார இறுதியில் 20 திரையரங்குகளில் 183 திரையிடப்பட்டு ரூ.21,70,310 வசூல் செய்துள்ளது.
அதுமட்டுமின்றி பிப்ரவரி 2 முதல் பிப்ரவரி 5 வரையிலான 4 நாட்களில் சென்னையில் ரூ.27,76,530 வசூல் செய்துள்ளது
மேலும் ஜாக்கிசான் நடித்த குங்பூ யோகா’ திரைப்படம் கடந்த வார இறுதியில் 15 திரையரங்குகளில் 101 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.16,52,280 வசூல் செய்துள்ளது.