மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சசிகலாவிற்கு எதிராக அதிரடி பேட்டியளித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள தனது வீட்டில் செய்தியளார்கைளை சந்தித்து பேசிய தீபா கூறியதாவது,
சசிகலாவை பார்த்து நான் பயப்படவில்லை, தேர்தலில் கட்டாயம் நான் போட்டியிடுவேன்.
எதிர்வரும் 24ம் திகதி முன்பு தெரிவித்ததை போல் முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன்.
சசிகலா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டது ஏற்க முடியாது, மக்கள் சசிகலாவுக்கு வாக்களிக்கவில்லை.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து டாக்டர்கள் அளித்த விளக்கத்தில் திருப்தி இல்லை.
ஜெயலலிதாவுக்கு என்னனென்ன சிகிச்சை அளிக்கபட்டது என்பது குறித்து முழுமையான விவரம் தேவை.
ஜெயலலிதாவின் மருத்துவ செலவுக்கான ரசீதை அவர் குடும்பத்திடம் அளித்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், யார் அந்த குடும்பத்தினர் என அவர்கள் குறிப்பிடவில்லை.
ஜெயலலிதாவின் மருத்துவ செலவுக்கான தொகையை நான் கொடுக்கவில்லை.
தேர்தலில் நான் கட்டாயம் போட்டியிடுவேன். இளைஞர்கள், புதியவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.