சைட்டம் என்ற மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டங்கள் இடம் பெற்று கொண்டு வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் உரிமைகள் என்ற அமைப்பு தம்புள்ளை பிரதேசப் பகுதியில் நேற்று விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தது.
இதன் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டின் சுதந்திர கல்வித் திட்டத்திற்கு எதிராக செயற்பட்டு வருகின்றார் என எதிர்ப்பு கூறப்பட்டது.
தம்புள்ளை பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்னாள் இடம் பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் போது பிரதமரின் கொடும்பாவி வீதியில் எரித்து தமது கடுமையான எதிர்ப்புகளை ஆர்ப்பாட்ட காரர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
இது இவ்வாறு இருக்க பதவியில் உள்ள பிரதமரின் கொடும்பாவி எரிக்கப்பட்டமை கண்டிக்கத்தக்கது எனவும், இது சர்வதேசத்தின் மத்தியில் இலங்கை தொடர்பில் தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தக் கூடும் எனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை பிரதமருக்கு எதிராக தற்போது கடுமையான எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டு வருவதோடு அவர் பதவி விலக வேண்டும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.