சீன உயிரியல் கடிகாரம் மூலம் நமது உடலில் எந்த உறுப்பு சரியாக இயங்காமல் உள்ளது என்பதை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.
சீனர்களின் உயிரியல் கடிகாரத்தின் படி, நமது ஒவ்வொரு உறுப்பும், தன்னுடைய அதிகப்படியான இயக்கத்திற்கு 2 மணி நேரத்தை எடுத்துக் கொள்கிறது.
அந்த நேரத்தில் ஏதேனும் ஒரு உறுப்பில் இடையூறுகள் ஏற்பட்டால், அது நமக்கு ஒருசில அறிகுறிகளை சுட்டிக்காட்டுகிறது என்று அர்த்தமாகும்.
அப்படி சுட்டிக்காட்டும் நேரத்தை வைத்தே நமது உறுப்பில் எந்த உறுப்பு பாதிப்படைந்துள்ளது என்பதை நாம் தெரிந்துக் கொள்ளலாம்.
1 a.m – 3 a.m
இந்த நேரத்தில் நமது உடம்பில் உள்ள கல்லீரல் உணவுகளை செரிப்பதற்கு பித்தநீரை அதிகம் சுரக்கும் பணியில் ஈடுபடுவதோடு, நச்சுக் கிருமிகளை வெளியேற்றிக் கொண்டிருக்கும். எனவே இந்நேரத்தில் ஒருவருக்கு தூக்கம் கலைந்தால் கல்லீரலில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தமாகும்.
3 a.m – 5 a.m
இந்த நேரத்தில் நமது உடம்பில் உள்ள நுரையீரல் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனை சேகரித்து மற்ற உறுப்புகளுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டிருக்கும். எனவே இந்த நேரங்களில் தூக்கம் கலைந்தால் அது நுரையீரல் அல்லது சுவார பிரச்சனையின் காரணமாகும்.
5 a.m – 7 a.m
இந்த நேரத்தில் பெருங்குடல் சுத்தம் செய்யும் பணியை செய்யும். குடலியக்க பிரச்சனையால் மலம் வெளியேற்றுவதில் பிரச்சனை இருப்பவர்கள், இந்த நேரத்தில் வயிற்று பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
9 a.m – 11 a.m
இந்த நேரத்தில், நமது உடம்பில் உள்ள கணையம் மற்றும் மண்ணீரல் பணியை செய்யும். எனவே இந்நேரத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பது கணையம் மற்றும் மண்ணீரல் ஆகும்.
11 a.m – 1 p.m
இந்த நேரத்தில் நமது உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் நமது உடல் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும். எனவே இந்த நேரங்களில் நாம் மிகுந்த சோர்வை உணர்ந்தால், அது நமது ரத்த ஓட்டத்தில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தமாகும்.
1 p.m – 3 p.m
இந்த நேரமானது நமது சிறுகுடல் அதன் பணியைச் செய்கிறது. மேலும் இந்த நேரத்தில் உணவுகள் உடலால் உறிஞ்சப்படுகிறது. எனவே உடலில் ஆற்றல் சற்று குறைவாகவே இருக்கும்.
3 p.m – 5 p.m
இந்த நேரங்களில் நமது சிறுநீர்ப்பைகள் அதன் வேலையை செய்யும். எனவே இந்த நேரத்தில் தான் நமது உடலின் ஆற்றல் தக்க வைத்து உடலில் இருந்து கழிவுகள் வெளியேற்றப்படுகிறது.
5 p.m – 7 p.m
இந்த நேரத்தில் நமது உடம்பின் சிறுநீரகங்கள் தங்களது பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும். எனவே இதனால் இந்த நேரத்தில் இரவு உணவை உட்கொள்வது மிகவும் நல்லது.
7 p.m – 9 p.m
இந்த நேரத்தில் தான் நமது உடம்பின் முதன்மையான உறுப்பாக இருக்கும் இதயம் மற்றும் இதயத்தை சுற்றி இருக்கும் சவ்வுகள் ஓய்வு எடுத்துக் கொள்ளும்.
9 p.m – 11 p.m
இந்த நேரத்தில் தான் நமது இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்கள் மற்றும் நாளமில்லா சுரப்பிகள் செய்யும் பணிகள் சீராகி, நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும்.
11 p.m – 1 a.m
இந்த நேரத்தில் கல்லீரலில் இருந்து பித்தநீர் சுரக்கப்பட்டு, உணவை செரிப்பதற்கு பித்தப்பைக்கு சென்று உடல் மறு உருவாக்கம் அடைகிறது. எனவே இந்த நேரத்திலும் தூக்கம் வராவிட்டால், பித்தப்பை பிரச்சனை என்று அர்த்தமாகும்.