உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை மற்றும் கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை அன்றாடம் சாப்பிடுவதால், ஒருவர் தங்களது உயரத்திற்கு ஏற்ற எடையுடன் இல்லாமல், உடல் பருமனால் அவஸ்தைப்படுகின்றனர். உடல் பருமனானது கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
எனவே இந்த பெரும் பிரச்சனையில் இருந்து விடுபட, பலரும் அன்றாடம் உடற்பயிற்சி, டயட் போன்றவற்றை மேற்கொண்டு வருகின்றனர். வெறும் உடற்பயிற்சியும், டயட்டும் அனைவருக்குமே நல்ல பலனைத் தரும் என்று எதிர்பார்க்க முடியாது. சிலருக்கு இவைகளே நல்ல மாற்றத்தைக் காட்டினாலும், இன்னும் சிலருக்கு கொழுப்புக்களைக் கரைக்க மெட்டபாலிசத்தைத் தூண்டும் சில பானங்கள் அவசியமாக உள்ளது.
இதுவரை நாம் உடல் எடையைக் குறைக்க உதவும் எத்தனையோ பானங்களைப் பார்த்திருப்போம். ஆனால் இப்போது பார்க்கப் போகும் பானமோ, உடல் எடையைக் குறைக்க மட்டுமின்றி, இதர உடல்நல பிரச்சனைகளைப் போக்கவும் உதவும்.
தக்காளி
இந்த பானத்தின் முக்கிய மூலப் பொருளே தக்காளி தான். தக்காளியில் லைகோபைன் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இது உடலின் வெப்பநிலையை மேம்படுத்தி, கொழுப்புக்களைக் கரைக்கும் பணியை வேகமாக்கும்.