தங்கம் பரிசாக வழங்கும் கோயில் இந்தியாவில் மத்தியபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. கோயில் என்பது பக்திக்கான இடம் மட்டுமல்ல. வறியவர்களுக்கு வசதியானவர்கள் தங்களால் இயன்றவற்றை வழங்குவதற்கு நம் முன்னோர்கள் அமைத்துகொடுத்த இடமாகும்.
பொதுவாக கோயில்களில் திருநீறு, குங்குமம் பிரசாதமாக வழங்குவது வழக்கம். ஆனால் இந்த கோயிலில் தங்க பிரசாதம் வழங்கப்படுகிறது என்பது நிச்சயமாக ஆச்சரியமளிக்கும் விசயமாகும்.
நாம் கோயிலுக்கு செல்லும்போது பணமாக காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்த கோவிலுக்கு வருபவர்கள் தங்களால் முடிந்த பணம், வெள்ளி, தங்கம் போன்றவற்றை காணிக்கையாக தருகிறார்களாம்.
அந்த வருடத்தின் தீபாவளி நன்னாளில் மொத்த காணிக்கையையும் கணக்கிட்டு, வந்த தங்கம்,வெள்ளி, காசுகளை அப்படியே கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்களாம்.
கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் பணம், தங்கம், வெள்ளி போன்றவை குவியல் குவியலாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
மத்தியபிரதேச தலைநகர் போபாலிலிருந்து 300 கிமீ தொலைவிலும், இந்தூரிலிருந்து 137 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது இந்த கோயில்.