வீடியோக்களை பகிரும் முன்னணி தளமாக விளங்கும் யூடியூப்பில் நாள்தோறும் மில்லியன் கணக்கான பயனர்கள் பிரவேசிக்கின்றனர்.
அதிலும் மொபைல் சாதனம் மூலம் இத்தளத்தினை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையே ஒப்பீட்டளவில் அதிகமாகக் காணப்படுகின்றது.
இவ்வாறு மொபைல் சாதனங்களில் யூடியூப் தளத்தினைப் பயன்படுத்துபவர்களுக்காக Double-Tap Gesture எனும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இவ் வசதியின் ஊடாக குறித்த ஒரு வீடியோவினை 10 செக்கன்கள் வரை முன் பின்னாக நகர்த்தி பார்வையிட முடியும்.
கூகுளின் Android மற்றும் ஆப்பிளிள் iOS சாதனங்களுக்காக இவ் வசதி முதன் முறையாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.
வீடியோ ஒன்றினை முழு திரையில் பார்வையிடும்போது மட்டுமே பெறக்கூடியதாக இருக்கும் இவ் வசதிக்குரிய பொத்தான் இடது அல்லது வலது பக்க மூலையில் தரப்படவுள்ளது.
இவ் வசதியானது பயனர்களின் வரவேற்பைப் பெறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.