பேரீச்சம்பழம் மலச்சிக்கலை போக்கிடும் தன்மை கொண்டது. பித்த சம்பந்தமான நோய் உள்ளவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.
தேவையான பொருட்கள்:
கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் – 20
பால் – 2½ கப்
முந்திரி மற்றும் பாதாம் – 10
நெய் – 1 தேக்கரண்டி
செய்முறை :
பேரீச்சம் பழத்தை கழுவி ½ கப் பாலில் ஊற வைக்கவும்.
அரை மணி நேரத்திற்கு பிறகு பழத்தை ஊற வைத்த, பாலை விட்டு மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
இதே நேரத்தில் 2 கப் பாலை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி பாதியாக சுண்டும் அளவிற்கு காய்ச்சிக் கொள்ளவும்.
அரைத்த பேரிச்சை கலவையை காய்ச்சி பாலில் ஊற்றி லேசாக சிறிது நேரம் கொதிக்க விடவும்.
இதே நேரத்தில் 1 தேக்கரண்டி நெய் விட்டு முந்திரி, பாதாம் அல்லது தேங்காய் சீவல்களை சிவக்க வறுத்து பாலில் சேர்க்கவும்.
தேவைப்படுபவர்கள் ஏலக்காய் அல்லது குங்குமப்பூவையும் கூட சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த பாயசத்திற்கு சர்க்கரையோ வெல்லமோ சேர்க்க வேண்டிய அவசியமில்லை.
சூப்பரான பேரீச்சம்பழ பாயாசம் ரெடி.