ஐ.எஸ் தீவிரவாதிகளை எதிர்த்து போராடிய 23 வயது பெண், ஐ.எஸ் அமைப்பினரின் அச்சுறுத்தலை பெற்றுள்ள நிலையில், தனது சொந்த நாட்டிலிருந்தும், குடும்பத்திலிருந்தும் ஒதுக்கப்பட்ட துயரம் டென்மார்க்கில் இடம்பெற்றுள்ளது.
ஜோகன்னா என்பவர் டென்மார்க்கில் அரசியல் கற்கைநெறியை இடையில் நிறுத்திவிட்டு, 2012 ஆம் ஆண்டு ஜகாதீஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடுவதற்கு தயாரானார், அந்நாடு விதித்த வெளிநாடு செல்லும் தடைகளை மீறி சிரியா சென்று ஐ.எஸ் அமைப்பிற்கு எதிராக போராடிய குற்றத்திற்காக நாட்டிற்கு அச்சுறுத்தலானவர் என தீர்ப்பளிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்ததோடு, அவரது குடும்பத்திலிருந்தும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்.
மேலும் ஈராக் மற்றும் சிரியாவில் நடந்த தீவிரவாத எதிர்ப்பு போரில், குர்தீஸ் மற்றும் வை.பி.ஜி அமைப்பினருடன் இணைந்து தாக்குதல் நடத்தியமைக்காக, ஐ.எஸ் அமைப்பினரால் 1 மில்லியன் பவுன்களுக்கு சன்மானம் அறிவிக்கப்பட்டு, தேடப்படுபவர் வரிசையில் இவரும் உள்ளடங்குபவராவார்.
இந்நிலையில் சர்வதேச ஊடகமொன்றிக்கு இவர் அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளதாவது : தான் ஐரோப்பாவையும், தனது நாட்டையும், ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக, ஒரு ஸ்னைப்பர் தாக்குதல் ஆயுததாரியாக மாறி, ஈராக் மற்றும் சிரிய யுத்தத்தில் பங்கு பற்றியுள்ளதோடு, சுமார் 100 இற்கும் மேற்பட்ட ஐ.எஸ் தீவிரவாதிகளை கொன்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தனது விடுமுறைக்காக தாய்நாட்டிற்கு வந்த தன்னை டென்மார்க் புலனாய்வு பிரிவினர், வெளிநாட்டிற்கு போகமுடியாத சட்டமொன்றை பிறப்பித்து, தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பங்குபற்ற விடாமல் தடுத்ததாகவும், அதனால் குறித்த சட்டத்தை மீறி சிரியா சென்று போரிட்ட நிலையில், கடந்த வருடம் டிசம்பர் மாதமளவில் புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு தனது விருப்பப்படி ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடியதோடு அவர்களால் பாலியல் அடிமையாக்கப்பட்டவர்களை மீட்பதற்கும், ஐரோப்பாவிற்குள் தீவிரவாத செயற்பாடுகள் நுழையாமல் தடுக்கவுமே, தனது போராட்டம் இருந்நததாக தெரிவித்துள்ளார்.
ஜேகன்னா சிறைவாசம் அனுபவித்தால், வீட்டிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் அதிபயங்கரவாத தீவிரவாதியாக முத்திரையளிக்கபடாத நிலையில், நாட்டிற்கு ஆபத்தானவராக அடையாளப் படுத்தப்பட்டுள்ளமையால் தனது சுதந்திரம் பறிக்கப்பட்டு, ஒவ்வொரு மூன்று நாட்களுக்கு ஒருமுறையும், தனிமையான இடங்கள்களில் பதுங்கி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்தோடு தனது பொருளாதார முடக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு தீவிரவாத ஆதரவாளர்களால் தாக்குதல்களுக்கு உட்பட்டு வருவதாகவும், தான் குறித்த தகவல்களை பகிர்ந்து யாருடைய அனுதாபத்தையும் பெற முனையவில்லையென்றும், மாறாக தன்னை போன்ற போராளிகளுக்கான குறைந்தப்பட்ச சமூக புறிந்துணர்வுகளை ஏற்படுத்துவதற்கே, தான் குறித்த தகவல் பகிர்வின் மூலம் முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.