நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள கோட்டா கோ கமவில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்று 36ஆவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு காரணமான ஜனாதிபதி அதற்கு பொறுப்பு கூற வேண்டுமென போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைதியான முறையில் ஆரம்பமான மக்கள் எழுச்சிப் போராட்டம் ஒரு பல எதிர்ப்புகளையும் மீறி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தப் போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், வழமைப்போன்று தற்போதும் அரசாங்கத்தை வீட்டுக்குச் செல்லுமாறு கோசமெழுப்பி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இதன்போது, புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கும் எதிர்ப்பு தெரிவித்து அங்கு கோசம் எழுப்பப்பட்டு எழுப்பப்பட்டு வருகின்றது.
இதேவேளை, அலரி மாளிகைக்கு முன்பாக No Deal Gama எனும் பெயரில் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, எரிவாயுவினை பெற்றுத்தறுமாறு கோரி சில பகுதிகளில் இன்றைய தினம் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
மட்டக்குளி, கொம்பனித்தெரு, நாவின்ன சந்தியில் உள்ள ஹைலெவல் வீதி மற்றும் ஹோமாகம மற்றும் கொலன்னாவ உள்ளடங்களாக பல்வேறு பகுதிகளிலும் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.