இலங்கையில் இன்று காலை தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இன்று மாலை 6 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை அதிகாலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கடந்த 9ஆம் திகதி தாக்குதல் நடத்தியிருந்தனர்.
கொழும்பு அலரி மாளிகையில் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தித்து ஆதரவு தெரிவித்ததன் பின்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.
அத்துடன், அலரி மாளிகைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த ‘மைனா கோ கம’ போராட்ட களம் மற்றும் காலி முகத்திடலில் உள்ள ‘கோடா கோ கம’ போராட்டகளம் இரண்டையும் அவர்கள் தகர்த்தெறிந்திருந்தனர்.
இதனையடுத்து, கோட்டா கோ கமவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் உட்டபட பொதுமக்களும் இணைந்து எதிர்த்தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.
தொடர்ந்து, நிலைமையைக் கட்டுக்குள்கொண்டு வருவதற்காக நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், ஊரடங்கும் அமுல்படுத்தப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து அவ்வப்போது ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது என்பதுக் குறிப்பிடத்தக்கது.