மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ படத்தில் பின்னர் நடிகர் கார்த்தி ‘சதுரங்க வேட்டை’ டைரக்டர் வினோத் இயக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
இப்படத்தின் கதாநாயகியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார். அபிமன்யூ சிங் வில்லனாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு 3 நாட்கள் சென்னையில் நடைபெற்று வந்த நிலையில், எதிர்வருகிற 14ஆம் திகதி முதல் 2ஆம் கட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் ஆரம்பமாகி மார்ச் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
பொலிஸ் சம்பந்தப்பட்ட பெரும்பாலான காட்சிகள் இங்கு தான் படமாக்கப்படுகின்ற நிலையில், இரண்டு பாடல்காட்சிகளும் ராஜஸ்தான் மாநிலத்தின் படமாக்கப்படுகின்றன.
மேலும், தெலுங்கு நகைச்சுவை நடிகர் நர ஸ்ரீனிவாஸ் இப்படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார்.