Loading...
ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த எவரும் அரசுடன் இணைந்துகொள்ளமாட்டார்கள் என்று அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
Loading...
“சலுகைகளுக்காகவும், வரப் பிரசாதங்களுக்காகவும் தமது கட்சியையோ அல்லது தமது சுயமரியாதையைக் காட்டிக்கொடுக்கும் உறுப்பினர்கள் யாரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை. எவரும் அரசுடன் இணைந்துகொள்ளப் போவதில்லை.
சில ஊடகங்கள் பொய்யான வதந்திகளைப் பரப்பி, சர்வாதிகார அரசுக்கு ஒட்சிசனை வழங்க முயற்சிக்கின்றது. மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதே ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து உறுப்பினர்களின் நோக்கமாகும்” – என்றார்.
Loading...