Loading...
இலங்கையில் பெண்களுக்கு எதிரான புறக்கணிப்புக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பெண்கள் புறக்கணிப்புக்கு எதிரான குழு ஆராயவுள்ளது
ஏதிர்வரும் 13ஆம் திகதி முதல் மார்ச் 3ஆம் திகதிவரை குழுவின் அமர்வு ஜெனீவாவில் நடைபெறவுள்ளது. இதன்போது இலங்கை, யுக்ரெய்ன், அயர்லாந்து ஜோர்தான், ருவன்டா மற்றும் மெசடோனியா ஆகிய நாடுகளில் உள்ள பெண்களின் நிலை குறித்து ஆராயப்படவுள்ளது.
Loading...
இதன் ஒழுங்கில் பெப்ரவரி 22ஆம் திகதியன்று இலங்கையின் பெண்கள் தொடர்பில் குழு ஆராயவுள்ளது. இந்த அமர்வின்போது சர்வதேசரீதியான 23 சுயாதீன நிபுணர்கள் பல்வேறு தொடர்புடைய தரப்புக்களுடன் சந்திப்புக்களை நடத்தவுள்ளனர்
இதனையடுத்து மார்ச் 6ஆம் திகதியன்று அமர்வின் இறுதியறிக்கை வெளியிடப்படவுள்ளது.
Loading...