முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை சுற்றியிருந்த குரங்குகள் போன்று பலரால் அவருக்கு இந்த துரதிஷ்டவசமான கதி நேர்ந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
2020ஆம் ஆண்டிலிருந்து நாட்டை ஆட்சி செய்வது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அல்ல என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட எழுத்துமூல வாக்குறுதிகள் கூட மீறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அலரிமாளிகையில் இருந்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த கம்மன்பில, மகிந்த ராஜபக்சவின் துரதிஷ்டமான தலைவிதியை அவரைச் சுற்றியிருந்த குரங்குகள் போன்று சிலரே மேற்கொண்டனர்.
சில வாரங்களுக்கு முன்னர் வாசுதேவ நாணயக்கார மகிந்த ராஜபக்சவுக்கு ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளதாகவும்,அதனை செயற்படுத்த தவறியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் பதவியை ஏற்க எவரும் முன்வராத பட்சத்தில் ரணில் விக்ரமசிங்கவை நியமித்தமைக்கு தாம் ஆட்சேபனை தெரிவிக்கப்போவதில்லை எனவும், விக்ரமசிங்கவைப் பிடிக்காவிட்டாலும் இம்முறை இழுத்தடிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
![](https://www.theevakam.com/wp-content/uploads/2022/05/gfg.jpg)