மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் நிறைவேற்று அதிகாரியான சமீர சேனாரத்னவின் வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாதப் பிரதிவாதங்களின்போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியின் பிரதான நிறைவேற்று அதிகாரியின் வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை ஒன்றை சபைக்கு சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு பதிலளித்து கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் பின்னர் ஓரிரு வாரங்களில் அறிக்கை கிடைக்கும். அந்த அறிக்கையை சபையில் சமர்ப்பிப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.