அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை விடவும் தனது தந்தை பணக்காரர் என தற்போதைய அரசாங்கம் பெயரிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்டவின் புக்கத வெளியீட்டு நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே நாமல் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி தேர்தலுக்காக மக்களுடன் இணைய ஆயத்தம் என இந்த சந்தர்ப்பத்தில் இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பொதுபல அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரரும் இந்த சந்தர்ப்பத்தில் இணைந்துக் கொண்டுள்ளார்.
இந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் நிகழ்வின் பின்னர் அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அமைச்சரவை மாற்றம் ஏற்பட்டாலும் நாட்டின் பிரச்சினை தீர்க்கப்படாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.