போகன் படத்துக்கு பிறகு அடுத்து எந்த படமும் கமிட் ஆகவில்லை ஹன்சிகாவுக்கு. விஷ்ணு விஷால், ஜிவி.பிரகாஷ் ஆகியோருடன் இணைய பேச்சு மட்டும்தான் நடக்கிறது. மலையாளத்தில் மோகன்லாலுடன் நடிக்க ஒரு படம் கமிட் ஆகியிருக்கிறாராம். ஆனால் கேள்விப்படும் ஒரு செய்தி ஹன்சிகா இன்னும் நிறைய படங்களில் நடித்து சம்பாதிக்க வேண்டும் என்று வாழ்த்த வைக்கிறது.
மும்பையை சேர்ந்த ஹன்சிகா தான் நடிக்க வந்து முதல் சம்பளம் வாங்கியது முதலே ஆதரவில்லாத அனாதைக் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து படிக்க வைத்து வருகிறார்.
முப்பதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அந்த வகையில் தாயாகவும் தந்தையாகவும் விளங்கும் ஹன்சிகா இப்போது அந்த குழந்தைகளுக்காக தனி வீடு ஒன்று கட்டப்போகிறாராம்.
இதற்காக மும்பையின் முக்கிய பகுதி ஒன்றில் இடம் வாங்கிப் போட்டுவிட்டார்.
விரைவில் பூஜையுடன் வீடு எழும்பப்போகிறது. நூறு குழந்தைகள் வசிக்கும் அளவுக்கு பெரிய வீடாக கட்ட ஹன்சிகாவுக்கு ஆசையாம்.