பணியில் இருந்த தொய்வு அகலும் நாள். பரபரப்பாகச் செயல்படுவீர்கள். வியாபாரம், தொழிலில் அதிக அக்கறை காட்டுவீர்கள். சொத்து சம்பந்தமாக ஏற்பட்ட வழக்குகள் சுமுகமாக முடியும்.
தெய்வீகச் சிந்தனை மேலோங்கும் நாள். நீங்கள் தேடிச் சென்று பார்க்க நினைத்த நண்பர் ஒருவர் உங்களைத்தேடி வரலாம். குடும்ப நலன் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
அலைச்சல் அதிகரிக்கும் நாள். முன்கோபத்தை தவிர்ப்பதன் மூலம் முன்னேற்றம் காணலாம். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிச் சேர்ப்பதில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.
துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவும் நாள். உத்தியோக நலன் கருதி பயணமொன்றை மேற்கொள்ளக் கூடிய சூழ்நிலை உருவாகும். குடும்பத்தாருடன் அனுசரித்துச் செல்வது நல்லது.
வரன்கள் வாயில் தேடிவரும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வெளிநாட்டு பயணங்கள் கை கூடுவதற்கான அறிகுறி தோன்றும். திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் வந்து சேரலாம்.
நினைத்தது நிறைவேறி நிம்மதி கிடைக்கும் நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு அஸ்திவாரமிடுவீர்கள். வெளி வட்டாரத் தொடர்பு விரிவடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். தொட்ட தெல்லாம் தாமதம் என்ற நிலை இனிமாறும். பிள்ளைகள் குடும்ப பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். உடல் நலம் சீராகும்.
சிவாலய வழிபாட்டால் சிறப்புக ளைக் காண வேண்டிய நாள். வாங்கல் கொடுக்கல்களில் கூடுதல் கவனம் தேவை. தொழில் பணியாளர்களை அனுசரித்துக் செல்வதன் மூலம் அனுகூலம் கிடைக்கும்.
கரைந்த சேமிப்புகளை ஈடுகட் டும் நாள். புதிய நபர்களின் அறி முகம் கிட்டும். தெய்வ நம்பிக்கை கூடும். ஆடம்பரப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். வாழ்க்கைத் துணை வழியே வரவு வந்து சேரும்.
மனக்குழப்பம் மாறும் நாள். பொருளாதார விருத்தியுண்டு. மறை முக போட்டிகளைச் சமாளிப்பீர்கள். அக்கம் பக்கத்து வீட்டாரின் அன்புத் தொல்லைகள் வந்து சேரும். உத்தியோக மாற்றச் சிந்தனை உருவாகும்.
உதிரி வருமானங்கள் பெருகும் நாள். உயரதிகாரிகளின் ஆதரவு கிட் டும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். தடைப்பட்ட கல்யாண பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவிற்கு வரலாம்.
உறவினர்கள் உதவிக்கரம் நீட்டும் நாள். உயர்ந்த பதவி வருவதற்கான வாய்ப்பு கைகூடும். கவுரவம், அந்தஸ்து உயரும். நினைத்ததை நிறைவேற்ற தருணம் பார்த்து காத்திருப்பீர்கள்.