காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ்தேவி ரயிலில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்தேவியின் ரயில் பெட்டியொன்றில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பணம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொத்துஹெர, குருநாகல் முத்தெட்டுகல மற்றும் மஹவ முதலான ரயில் நிலையங்களில் பெற்றுக்கொடுக்கப்பட்ட பணப்பொதியே இவ்வாறு காணாமல்போயுள்ளது.
சம்பவம் தொடர்பில் ரயில்வே திணைக்களமும், பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பணம் காணாமல் போனமை தொடர்பில் குறித்த ரயிலில் பணியாற்றிய கட்டுப்பாட்டாளர், சாரதி மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய அதிகாரிகளிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் ரயில் பாதுகாப்பு பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ரயில்வே கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.