Loading...
நேற்று பத்திரிகையாளர்க சந்திப்பின்போது பன்னீர் செல்வம் பேசியவற்றில் 10 தெறி குறிப்புகள் இதோ
Loading...
- முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நான்தான் முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என வற்புறுத்தினார்கள். கட்சிக்கும் ஆட்சிக்கும் பங்கம் வரக்கூடாது என வலியுறுத்தியதால் கருத்து வேற்றுமைகளை தவிர்க்கவே முதல்வர் பதவியை ஏற்றேன்.
- அதிமுக பொதுச் செயலாளர் பதவி மதுசூதனனுக்கு கொடுக்கப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால், அதற்கு மாறாக சசிகலா அதிமுக பொதுச் செயலாளரானார்.
- ஜல்லிக்கட்டு தொடர்பாக நான் ஒரு புறம் பிரதமரை பார்க்க சென்ற போது மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அதே கோரிக்கை வைத்தார்.
- வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார், சசிகலா முதல்வர் ஆக வேண்டும் என பேட்டி கொடுத்தார். என்னை வற்புறுத்தி முதல்வர் ஆக்கிவிட்டு ஏன் இப்படி அவமானப்படுத்துகிறார்கள் என்று கேள்வி எழுந்தது.
- தமிழகத்தின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றும் ஒருவர் தலைவராக வரவேண்டும். அதிமுக பொதுச்செயலாளராக அடிமட்ட தொண்டனே வர வேண்டும்.
- ஆட்சிக்கு நல்லவர் தலைவராக பொறுப்பு ஏற்க வேண்டும். அதற்காக தன்னந்தனியாக நின்று போராடுவேன்.
- கட்டாயப்படுத்தி என்னை ராஜினாமா செய்ய வைத்தார்கள் : மக்கள் விரும்பினால் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்பேன்.
- மனதில் உள்ள விடயங்களில் 100 சதவீதத்தில் தற்போது 10 சதவீதம் தான் பேசியுள்ளேன்.
- மிருகங்களால் சிரிக்க முடியாது. மனிதர்களால் சிரிக்க முடியும். ஸ்டாலினைப் பார்த்து சிரிப்பது குற்றமாகாது
- மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. கழகம், தொண்டர்கள் எண்ணம் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்.
Loading...