தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற 4ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி போராடி தோற்றுள்ளது.
நாற்பது ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 367 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பில் டு பிளிசிஸ் அதிகபட்சமாக 185 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்து அணிக்கு பலம் சேர்த்திருந்தார்.
தொடர்ந்து 367 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் வெறும் 327 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. அதன்படி நாற்பது ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்க அணி வெற்றியை தமதாக்கியது.
அந்தவகையில், ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தொன்னாபிரிக்க அணி நான்கு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. ஐந்தாவதும், இறுதியுமான போட்டி நாளைமறுதினம் இடம்பெறவுள்ளது.
இலங்கை அணியுடனான இந்த தொடரை ஐந்துக்கு பூச்சியம் என்ற வகையில் வைட் வொஷ் செய்வோம் என தென்னாபிரிக்க அணித் தலைவர் ஏ.பி.டிவில்லியர்ஸ் நம்பிக்கை வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.