பாராளுமன்றத்தின் நேற்றைய அமர்வின் போது ரஞ்சன் ராமநாயக்க பதில் கூற முற்பட்டதால் சபையில் பல மணி நேரத்திற்கு குழப்பம் ஏற்பட்டிருந்தது.
இந்திக் அநுருத்த ஹேரத் காணி தொடர்பிலான கேள்வியை எழுப்பும் போது ரஞ்சன் ராமநாயக்க குறித்த பிரச்சினை தொடர்பில் பதில் வழங்க முயன்ற வேளை கூட்டு எதிரணி உறுப்பினர்கள் கூச்சலிட்டதால் சபையில் குழப்பம் ஏற்பட்டது.
இவ்வாறு காணி தொடர்பான கேள்விகளின் போது காணி அமைச்சர், மற்றும் அதன் பிரதி அமைச்சர்களே அதற்கு பதிலளிக்க வேண்டும் என்பது பாராளுமன்ற நிலையியல் கட்டளையில் உள்ளது. ஆனால் ரஞ்சன் ராமநாயக்க பதில் கூற முற்பட்டதால் ஆசனத்தில் ஏறி கூட்டு எதிரணியினர் கூச்சலிட்டனர்.
அத்துடன் ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினார் அனுரா குமார திசாநாயக்க எழுந்து, குறித்த கேள்விகளுக்கு அமைச்சராக உள்ள கயந்த கருணாதிலகவே பதில் வழங்க வேண்டும். என்றும் வேறு ஒருவர் பதில் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.
இதன் காரணாமாக சபையில் பிரதமர் எழுந்து, பாராளுமன்ற நிலையியல் கட்டளை சட்டத்தின் பிரகாரம் தான் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு அனுமதி வழங்குவதாக தெரிவித்தார்.
இடையில் குறுக்கிட்ட சபாநாயகர் புதிய விடையங்களை சபையில் கொண்டு வர இடமளிக்க முடியாது என கூறி, குறித்த கேள்விகளுக்கு அமைச்சர் கயந்தவை பதில் கூறுமாறு தெரிவித்திருந்தார்.