Loading...
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் முத்துசாமி முகுந்தகஜன் என்பவருக்கே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Loading...
காவல்துறை கைது
நேற்றைய தினம் பிரதேச சபை உறுப்பினர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மாங்குளம் காவல்துறையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...