எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையில் இருந்து மீண்டு வருவதற்காக இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் மீண்டும் அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டம் தொடர்பான தொழில்நுட்ப கலந்துரையாடலின் ஒரு கட்டத்தை முடித்துக் கொண்டதன் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிலைப்பாடு
அதற்கமைய, நிலையான முறைகள் அடங்கிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு ஏனைய தரப்பினரின் ஆதரவுடன் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு உதவும் வேலைத்திட்டம்
இலங்கைக்கு ஆதரவளிக்கும் ஒரு வேலைத்திட்டத்திற்கு கடன் நிலைத்தன்மை மீளமைக்கப்படும் என்பதற்கான போதுமான உத்தரவாதம் அவசியமாகும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.