ஜோதிட சாஸ்திரத்தின்படி சனி முக்கிய பங்கு வகிக்கிறார். சனியின் மாற்றம் ஒரு நபரின் வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கொண்டுவருகிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றும் சனி, 2022 ஆண்டிலும் இரண்டு முறை ராசியை மாற்றுவார்.
அதன்படி, மீண்டும், ஜூலை 12 ஆம் தேதி சனி பகவான் தனது ராசியை மாற்றுகிறார். ஏப்ரல் 29ம் தேதி மகர ராசிக்கு பிரவேசித்த சனி பகவான், தற்போது மீண்டும் ஜூலை 12ம் தேதி வக்ர பெயர்ச்சியாக மீண்டும் மகர ராசிக்கே வந்தடைவார். அதில், சனி பகவான் ஜனவரி 17, 2023 வரை இருப்பார்.
மேஷம்
மேஷ ராசியினருக்கு சனியின் வக்ர பெயர்ச்சியனாது உங்களுக்கு வர அதிர்ஷ்டத்தை பாதிக்கும். ராகு உங்கள் ராசியில் அமர்ந்துள்ளார்.
சனி வக்ரமாக நகர்வதால் அசுபங்கள் அதிகரிக்கும். பண நஷ்டம் உண்டாகும். நிதி விஷயங்களில் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க வேண்டும். திருமண வாழ்வில் பிரச்சினைகள் ஏற்படலாம்.
கடகம்
கடக ராசியினர்களுக்கு சனியின் திசை நடந்துகொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் கடக ராசியினர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இந்த நேரத்தில் வேலை பாதிப்பை ஏற்படுத்தலாம். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.
மகரம்
மகர ராசியினர்களுக்கு ஏழரை நாட்டு சனி நடக்கிறது. இந்த நேரத்தில் உங்கள் பேச்சு மற்றும் பணத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
சனியின் வக்ரம் உங்கள் தொழிலை மோசமான விளைவை ஏற்படுத்தும். கடின உழைப்பு குறையலாம். உயர் அதிகாரிகளுடனான உறவுகள் மோசமடையக்கூடும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
கும்பம்
கும்ப ராசியினர்களுக்கு சனி உங்கள் ராசியில் பெயர்ச்சியாகியுள்ளார். இந்த ராசி மாற்றம் கடந்த 29 ஏப்ரல் 2022 அன்று நடைபெற்றது.
கும்ப ராசியில் சனி வக்ர நிலையில் இருக்கும். இதனால் நீங்கள் எந்த விவாதத்திலும் ஈடுபட வேண்டாம். புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். திருமணத்தில் தடைகள் ஏற்படலாம்.
சனியின் பலன்களை பெற
அனுமன் சாலிசாவை தினமும் படியுங்கள் அனுமனை வழிபடுவதால் சனியின் தோஷம் ஏற்படாது.
அனுமனின் ஆசியைப் பெற, தினமும் அனுமன் சாலிசாவை பாராயணம் செய்யுங்கள்.
சிவலிங்கத்திற்கு தண்ணீர் ஊற்றுங்கள் சிவபெருமானின் அருளால் சனிபகவானின் அசுப பலன்களைத் தவிர்க்கலாம். சிவபெருமானை மகிழ்விக்க, தினமும் சிவலிங்கத்திற்கு நீர் ஊற்றுங்கள்.