கூகுள் நிறுவனம் உருவாக்கி வருவதாக கூறப்படும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலின் புது வெளியீட்டு விவரம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த தேடுப்பொறி நிறுவனமான கூகுள் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிக்சல் போல்டு மாடலின் வெளியீடு இந்த ஆண்டு நடைபெறாது என தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிக்சல் போல்டு ஸ்மார்ட்போன் வெளியீடு அடுத்த ஆண்டு நடைபெறும் என கூறப்படுகிறது.
சர்வதேச சந்தையில் பிக்சல் போல்டு ஸ்மார்ட்போன் கூகுள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக இருக்கிறது. அளவில் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி Z போல்டு 3 மாடலின் அளவில் இருக்கும் என்றும் இதில் LTPO மற்றும் வேரியபில் ரிப்ரெஷ் ரேட் அதிகபட்சம் 120Hz வரை வழங்கப்படும் என தெரிகிறது.
கூகுள் பிக்சல் போன் மாடலில் 7.6 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட இருக்கிறது. எனினும், இந்த மாடல் எந்த மாதிரியாக மடிக்கும் திறன் கொண்டிருக்கும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்த மாடல் செங்குத்தாக மடிக்கக்கூடியதாக இருக்கும் என கூறப்படுகிறது.
கூகுள் நிறுவனம் சமீபத்தில் ஆண்ட்ராய்டு 12L ஓ.எஸ்-ஐ வெளியிட்டது. இது டேப்லெட், மடிக்கக்கூடிய மற்றும் குரோம் ஓ.எஸ். சாதனங்களுக்காக ஆப்டிமைஸ் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு 12 வெர்ஷன் கொண்டிருக்கிறது.