முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்கள் போராட்டம் இன்று ஆறாவது நாளாகவும் தொடரும் நிலையில் இராணுவ முகாமின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவ முகாமின் முன்வாசலில் விசேடமான முற்கம்பிகள் பொருத்தப்பட்டு பிரதான இருவழிப்பாதைகளுக்கும் அதிகளவிலான இராணுவத்தினர் பாதுகாப்பு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
தாம் தற்கொலை முயற்சிகள் எடுக்கப்போவதில்லை. அவ்வாறு ஒரு மனநிலை எமக்கு தோன்றுமாக இருந்தால் இராணுவ முகாம் அமைந்திருக்கும், எமது காணிகளுக்குள் நாம் நுழைவோம்.
அப்பொழுது இராணுவத்தினர் எம்மீது சிலவேளை துப்பாக்கிகளினால் தாக்குதல் நடத்தக்கூடும்.
பொது மக்களை தாக்குவது அவர்களுக்கு சாதாரண விடயம் தானே. அதனால் நாம் இறக்கும் முன்னாவது எமது காணிகளில் கால்பதிக்க முடியும் என தெரித்துள்ளனர்.