குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகாசிங் இந்தி-தமிழில் மாதவனுடன் நடித்த ‘இறுதிச்சுற்று’ படம் வெற்றி பெற்றது. தெலுங்கிலும் இந்த படம் ‘ரீமேக்’ செய்யப்பட்டது.
அதன்பிறகு விஜய் சேதுபதியின் ‘ஆண்டவன் கட்டளை’யில் நடித்தார். தற்போது ராகவா லாரன்சுடன் ‘சிவலிங்கா’ படத்தில் நடித்திருக்கிறார். அரவிந்த் சாமியுடன் ‘வணங்காமுடி’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வருவதால் தமிழ் பட உலகு மீது தனிப்பற்று வைத்திருக்கிறார். தமிழ் கற்பதிலும் ஆர்வமாக இருக்கிறார். அடுத்து நடிக்கும் தமிழ் படங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தனது தாயாருடன் சமீபத்தில் ரித்திகாசிங் சென்னை வந்துள்ளார். அப்போது நடிக்க இருக்கும் படங்கள் பற்றிய கதைகளையும் சென்னையிலேயே கேட்டு இருக்கிறார்.
சில முன்னணி நடிகைகள் கதை கேட்க, டைரக்டர்களை தாங்கள் இருக்கும் இடத்துக்கு வரச்சொல்வது வழக்கம். இந்த நிலையில், ரித்திகாசிங் சென்னை படக் கம்பெனிகளுக்கே தாயாருடன் வந்து கதை கேட்டது தமிழ் பட த.யாரிப்பாளர்கள் இயக்குனர்களிடம் அவருக்கு நல்ல மதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.