சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் பணிப்பாளர்கள் மட்டத்தில் ஏற்படுத்திக்கொள்ளும் உடன்படிக்கை மற்றும் கடன் வழங்கப்படவுள்ள திகதிகளை தெரிவிக்க முடியாது என நிதியத்தின் ஊடகப் பணிப்பாளர் கெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கை வரும் நாணய நிதிய அதிகாரிகள்
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் சிலர் அடுத்த வாரம் இலங்கைக்கு செல்ல உள்ளனர். நபர்கள் மட்டத்திலான சந்திப்புக்காக அவர்கள் இலங்கைக்கு செல்ல உள்ளனர்.
இதன் போது இலங்கை அதிகாரிகளுடன் தொழிற்நுட்பட பேச்சுவார்த்தைக்கு அமைய உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்படும்.
இலங்கை அதிகாரிகளின் அர்ப்பணிப்பே காலத்தை முடிவு செய்யும்
இலங்கை அதிகாரிகள் முன்வைக்கும் கொள்கை மற்றும் வலுவான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் பணிப்பாளர்கள் மட்டத்திலான உடன்படிக்கை தொடர்பான காலம் முடிவு செய்யப்படும்.
இலங்கையின் கடன் நிரந்தர மட்டத்தில் இருக்கவில்லை என்பதால், கடனை நிரந்தர தன்மைக்கு மாற்றுவது தொடர்பாக எமது பணிப்பாளர் சபைக்கு போதுமான உறுதியளிப்புகள் தேவைப்பகின்றன.
உலக உணவு நெருக்கடி மற்றும் எரிசக்தி நெருக்கடி காரணமாக இலங்கை மக்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்து நாங்கள் அவதானித்து வருகின்றோம்.
முடிந்த விதத்தில் இது சம்பந்தமான உதவிகளை செய்ய நாங்கள் அரப்பணிப்புடன் இருக்கின்றோம். எனினும் இதற்காக வழங்கப்படும் நிதி பலம், இயலுமை மற்றும் காலம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இன்னும் காலம் இருக்கின்றது என கெரி ரைஸ் கூறியுள்ளார்.