Loading...
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவராக செயற்பட்ட விஜித ஹேரத் தனது பதவியில் இருந்து ராஜினாமாச் செய்வதாக அறிவித்துள்ளார்.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக இருந்த துஷார பதவி விலகியதையடுத்து, நிறுவனத்தின் பெரும் பங்குகளைக் கொண்டிருந்த இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விஜித ஹேரத், லிட்ரோ நிறுவனத்தின் தற்காலிக தலைவராகவும் செயற்பட்டார்.
Loading...
புதிய தலைவர் யார்?
இந்நிலையில் இன்றைய தினம் அவர் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமாச் செய்துள்ளார். எனினும் காப்புறுதிக் கூட்டுத்தாபன தலைவர் பதவியில் தொடர்ந்தும் நீடிக்கவுள்ளார்.
லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக யார் நியமிக்கப்படக் கூடும் என்று இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
Loading...