நம் படுக்கை அறையில் ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் மூட்டை பூச்சிகளை யாரும் வேண்டுமென்றே அனுமதிக்க மாட்டார்கள்.
ஆனால், பன்னெடுங்காலமாக மனிதர்கள் வாழும் அனைத்து இடத்திலும் இந்த ரத்த உறிஞ்சி ஒட்டுண்ணிகள் கூடவே பயணித்து வருகின்றன.
ஏறத்தாழ 1990-களின் நடுப்பகுதியில் வளரும் நாடுகளில் மூட்டைப் பூச்சிகளின் தொந்தரவு ஓரளவுக்கு ஒழிக்கப்பட்டது.
ஆனால், சில பூச்சிக்கொல்லி மருந்துகளின் வீரியம் இழப்பு மற்றும் பூச்சி கட்டுப்பாடு நடவடிக்கைகளில் பின்னடைவு போன்ற பல்வேறு காரணங்களால் பெரும்பாலான நகரங்களை அது ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன.
என்னென்ன பாதிப்புகளை உருவாக்கும்?
நம் வீட்டில் அல்லது கட்டிலில் உள்ள விரிசல்கள் அல்லது ஓட்டைகள் போன்ற இடங்களில் இவை மறைந்திருக்கும். இவை நாம் தூங்கும் போது வெளியே வந்து ரத்தத்தை உறிஞ்சி விட்டு, மீண்டும் தங்களுடைய புகலிடங்களில் சென்று ஒளிந்து கொள்கின்றன.
மூட்டைப் பூச்சி கடிக்கும் இடங்களில் கரும்புள்ளிகள் தோன்றுகின்றன.
தோல் அரிப்பு, அழற்சி போன்ற பிரச்சினைகளை உண்டு செய்யும். மூட்டைப் பூச்சிகளுக்கு பயந்து வீட்டையே கொளுத்திய கதையாக இருக்கிறது என்ற முதுமொழி கூட உண்டு. அந்த அளவுக்கு பெரும் தொந்தரவு தரக் கூடிய இந்த ஒட்டுண்ணிகளில் இருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்வது அவசியம்.
விரட்டுவது எப்படி?
படுக்கை விரிப்புகளை சூடேற்றுங்கள்
அணியும் ஆடைகள் முதல் படுக்கையில் இருக்கும் விரிப்புகள் கால் மிதியடிகள் என அனைத்திலுமே வெப்பப்படுத்தும் கருவியை பயன்படுத்துவதன் மூலம் அதை வெளியேற்ற முடியும்.
வேக்யூம் க்ளீனர்
படுக்கையில் இருக்கும் பூச்சிகளை அகற்ற வேக்யூம் க்ளீனர் பயன்படலாம். வேக்யூம் க்ளீனர் கொண்டு வீட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் அடி விடாமல் சுத்தம் செய்வதன் மூலம் வீட்டை சுத்தப்படுத்திவிடமுடியும்.
அதே நேரம் ஒவ்வொரு அறை ஒரு நாள் என்று ப்ளான் செய்தால் இந்த இடத்திலிருந்து ஏற்கனவே சுத்தம் செய்த இடத்துக்கு எளிதாக இடம் பெயர்ந்துவிடும். ஒரே மூச்சில் சுத்தம் செய்வது பலனளிக்க கூடும்.
ஆல்கஹால்
ஆல்கஹாலை நீர் சேர்க்காமல் ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி படுக்கை அறையின் முலை முடுக்கெல்லாம் தெளிக்க செய்யவும். இதை தொடர்ந்து செய்வதன் மூலம் முட்டை பூச்சி வெளியேறிவிடும்.
அதெ நேரம் இந்த தெளிப்பானால் துணிகள் மெத்தைகள் கறைபடிகிறதா என்பதையும் கவனித்து கொள்வது நல்லது. ஆல்கஹால் கரைப்பான் மற்றும் அதன் செல்களை கரைக்க செய்கிறது.
இது பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது. எனினும் இது குறித்து ஆய்வுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எசென்ஷியல் எண்ணெய்
எசென்ஷியல் எண்ணெய் கொண்டு மூட்டை பூச்சிகளை வெளியேற்றிவிடலாம்.
எலுமிச்சை எண்ணெய் 10 முதல் 15 சொட்டுகள் எடுத்து அதில் 8 அவுன்ஸ் அளவு ஆல்கஹால் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் சேர்த்து கலக்கவும்.
இதை வீட்டில் ஒவ்வொரு மூலையிலும் தெளித்து விடவும். இதை தினமும் செய்து வரலாம்.
மூட்டைபூச்சி வெளியேறும் வரை இதை செய்துவிடலாம்.
அத்தியாவசிய என்ணெய் வலுவான நறுமணம் கொண்டது. இது பூச்சிகளை அழிக்கவும் செய்கிறது.