இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கும் நோக்கில் ரஷ்யா முக்கிய நிபந்தனையை முன்வைத்துள்ளது.
அண்மையில் ரஷ்ய விமானம் தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் போன்று மீண்டும் நடக்காமல் இருப்பதை இலங்கை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
ரஷ்யா விதித்துள்ள நிபந்தனை
மொஸ்கோ நகரத்தில் இருந்து, ரஷ்ய ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் அதிகாரப்பூர்வமான Tass செய்தி நிறுவனம் இது தொடர்பிலான அறிக்கையை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
தற்போது விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் விமான பயணங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், அண்மையில் Aeroflot விமானம் தடுத்து வைக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Aeroflot விமான சர்ச்சை
Aeroflot விமானங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து எந்தவித உத்தியோகபூர்வ கோரிக்கையும் மொஸ்கோவிற்கு கிடைக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.